கரூர்,
கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் தொடர்பாக வரும் 28ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார்.
தற்போது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி அறிவித்து உள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கரூரில் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் கல்லூரி அமையவிடாமல் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முட்டுக்கட்டை போடுவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார்.
கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவிருந்த இடத்தை மாற்றியதை கண்டித்து வருகிற 28-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.