ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புனை பெயரில் வலம்வந்த ஏராளமான பயனர்களின் உள்நுழைவை தற்காலிகமாக இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் பயனர்கள், தங்கள் பெயருக்கான தகுந்த பயனர்பெயர் கிடைக்காமல் திணறிவரும் அதேவேளையில், பல கவர்ச்சிகரமான பயனர்பெயர்களில் பதிவுகள் வெளியாவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வந்தது.

இதுபோன்ற பயனர்பெயர்களை வழங்குவதற்கு என்றே சில இணையதளங்கள் செயல்பட்டு வருவதும், அதில் ஓ-ஜி-யூசர்ஸ் என்ற இணையதளம் வாயிலாக பெறப்பட்ட நூற்றுக்கணக்கான பயனர்களின் உள்நுழைவை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் தற்காலிகமாக முடக்கியுள்ளன.

மேலும், இந்த பயனர்களுக்கு தங்களின் பதிவுகளில் ஏதாவது முக்கிய பதிவுகள் இருந்தால் அவற்றை பதிவிறக்கம் செய்ய அவர்களுக்கு 24 மணிநேரம்  அவகாசம் வழங்கி இருக்கிறது, இந்த அவகாசம் முடிந்ததும், அந்த பயனர்பெயர்களை நிரந்தரமாக முடக்கப்போவதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.