ண்டன்

த்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தினால் நாளை லண்டன் செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நாளை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.   அங்கு அவர் டௌனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இல்லத்துக்கு செல்கிறார்.  மோடி இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரசா மே வை அவர் இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

லண்டன் வாழ் இந்திய மக்கள் பிரதமர் மோடி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.  அவர் வருகைக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அவருடைய வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த உள்ளதாக தென் ஆசியா சாலிட்டேட்டரி குரூப் என்னும் அமைப்பு ஒரு சுவரொட்டியை  வெளியுட்டுள்ளது.  “மோடிக்கு வரவேற்பு கிடையாது”  என்னும் தலைப்பின் கீழ் ஒரு போராட்டம் நடைபெற உள்ளது.  மோடி அரசின் பலாத்கார குற்றவாளிகள் ஆதரவை எதிர்த்து 50 பெண்கள் கொண்ட குழு மனு ஒன்றை மோடிக்கு அளிக்க உள்ளது.

பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமரும் சந்திப்பு நிகழ்த்தும் போது டௌனிங் தெருவில் சுமார் 2000 பேர் கூடி போராட்டம் நடத்த உள்ளனர்.   இவர்களில் காஷ்மீரிகள், சீக்கியர்கள், தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல மாவட்டப் பிரதிநிதிகளும் உள்ளனர்.   இவர்கள் அனைவரும் கத்துவா மற்றும் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பலாத்காரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

போராட்டம்  நடத்த உள்ள அமைப்பின் மக்கள் தொடர்பாளர், “இந்தியர்களாகிய நாங்கள் மோடி அரசின் பாசிச போக்கை கடுமையாக எதிர்க்கிறோம்.   பலாத்காரக் குற்றவாளிகளை அவர் ஆதரிக்கிறார்.   இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.  தலித் மக்கள் கொல்லப்பட்டாலும் கண்டுக் கொள்வதில்லை.  கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்கள் கொலைக்கும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”  எனக் கூறி உள்ளார்.