அகமதாபாத்:

பிரதமர் மோடி பெற்ற எம்ஏ., பட்டத்தில் பெரும் முரண்பாடு இருப்பதாக குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி பெற்றுள்ள பிஏ., மற்றும் எம்ஏ., பட்டங்கள் போலியானவை என ஆம் ஆத்மி கட்சி கூறிவருகிறது.

இந்நிலையில், குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜெயந்திபாய் படேல் கூறும்போது, பிரதமர் மோடி பெற்றுள்ள எம்ஏ., பட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்கள், அந்த காலக் கட்டத்தில் பல்கலைக்ககழக பாடத்திட்டத்தில் இல்லை.

மோடி பெற்ற எம்ஏ., பகுதி 2 சான்றிதழில் பெரும் முரண்பாடு காணப்படுகிறது.

மோடி படித்த காலக்கட்டத்தில் நான் பேராசிரியராக இருந்துக்கின்றேன். அவர் ஒழுங்காக கல்லூரிக்கு வந்ததில்லை.

பல்வேறு விசயங்கள் குறித்து மாணவர்களுடன் விவாதித்தபோது, அதில் மோடி கலந்து கொண்டதில்லை.

எனினும் இதை குஜராத் பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் மகேஸ் படேல் மறுத்துள்ளார்.
அதேபோல், டெல்லி பல்கலைக் கழகத்தில் மோடி பெற்ற பிஏ பட்டம் போலியானது அல்ல. உண்மையான சான்றிதழே என டெல்லி பல்கலைக்கழக தருண் தாஸ் கூறியுள்ளார்.