டெல்லி: கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்கள் குற்றம் சாட்டிய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 3வது கட்டமாக 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மாநிலத்தில் உள்ள 18வயது மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், அதிக அளவிலான மருந்துங்களை வழங்க வேண்டும் என்றும், மாநிலங்களே யாருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

மேலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட சில மாநில அரசுகள், தடுப்பூசி மருந்து வழங்குவதில் மத்தியஅரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறி வருகின்றன.

இந்த நிலையில், மத்தியஅரசு சார்பில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. இதில்  ‘எந்தவித பாகுபாடும் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக கருதிதான் னைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாகத்தான் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் நடக்கிறது’

இதில் பாஜக ஆள்கிற மாநிலங்களில் ஒரு வகையிலும், பாஜக ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் நடப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்ளும் செயல்.

நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா தடுப்பூசிகளை பெற்று டாப் மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் என நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என  கூறி அதற்கான பட்டியலையும் இணைத்துள்ளார்.