சிம்லா

மாச்சல பிரதேச முதல்வ்ர் மற்றும் முதன்மை செயலாளர்கள் கடும் நிதி நெருக்கடியால் 2 மாத ஊதியத்தை கைவிட உள்ளனர்.

xr:d:DAFUcbhH9G4:2,j:258256006,t:22121109

தற்போது இமாசல பிரதேசத்தில் மோசமான நிதி நெருக்கடி நிலவுகிறது. எனவே அந்த மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் தானும், தனது அமைச்சர்கள் குழுவும், சட்டமன்ற செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் ஆகியோரும் அடுத்த 2 மாதங்களுக்கான தங்கள் சம்பளம் மற்றும் படிகளை கைவிடுவதாக அறிவித்துள்ளர்.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த அறிக்கையில், மாநில வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நடவடிக்கைகளின் பலன்கள் செயல்பட நேரம் எடுக்கும் என்று சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தணிக்க உதவுவதற்காக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை பின்பற்ற வேண்டும் எனவும், அவர்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் முதல்வர் சுக்விந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.