டெல்லி: கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என்பதை மருத்துவர்கள் சில பரிந்துரைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுதவிர, இருமல், தும்மல் உள்ள மாணவர்களை கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வர வேண்டாம். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும். முழுநீள கை சட்டையை அணியவேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிக முக்கியமான ஒன்று, எப்படி கைகளை கழுவ வேண்டும் என்ற வழிமுறைகள்தான். அதாவது கைகளை கழுவுவதில் 6 படிநிலைகளை பின்பற்ற வெண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதலில், கைகளின் 5 விரல்களையும் நீட்டியபடி வைக்க வேண்டும், பின்னர் வெறும் தண்ணீர் மட்டுமே கொண்டு கழுவ வேண்டும். அதாவது 6 விநாடிகள் வரை தண்ணீரால் மட்டுமே கழுவ வேண்டும்.
4வது படிநிலையாக, 6 விநாடிகள் சோப் கொண்டு கழுவ வேண்டும். 5வது படிநிலையாக மீண்டும் 15 விநாடிகள் சோப்பை பயன்படுத்தி கழுவ வேண்டும். இறுதிநிலையாக, 30 விநாடிகள் சோப்பால் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரசானது மண் அல்லது எண்ணெய் பிசுக்குகளில் படிந்திருக்கும் என்பதால் கிருமி நாசினி மட்டுமே அதை அப்புறப்படுத்தாது. தொடர்ந்து இதுபோன்ற வழிமுறைகளை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கள் பரவாத வண்ணம் இருப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதையும், பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.