புதுடெல்லி:

ஆதார் அட்டை தொலைந்து போனால், இணையத்தின் உதவியுடன் உங்களது ஆதார் அட்டையின் நகல் பிரதியை எளிதாக பெறலாம்.


ஆதார் அட்டையை வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு சேவைகளில் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், பல்வேறு அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த ஆதாரமாக ஆதார் அட்டைகளே உள்ளன.

அதனால், ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தொலைந்துபோனால் நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்:

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான UIDAI இணையத்துக்குள் செல்லுங்கள்.
மை ஆதார் என தலைப்பில் இருக்கும் ‘Retrieve Lost or Forgotten EID/UID’ link- ஐ க்ளிக் செய்யவும்.
அடுத்தபக்கம் பெயர், இ-மெயில்,தொலைபேசி எண், பாதுகாப்பு எண்ணை உருவாக்குதல் போன்ற விவரம் இருக்கும்.

இவற்றை பூர்த்தி செய்தபிறகு, என்டர் செய்து,. Send OTP- ஐ க்ளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுக்கு OTP வரும். அதனை பதிவு செய்யவேண்டும்.

சரிபார்த்தலுக்குப் பின்,உங்கள் நகல் ஆதார் அட்டை எண் இ-மெயில் மற்றும் தொலைபேசி எண்ணுக்கு வரும். இந்த ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் அட்டைக்கான நகல் பிரதியைப் பெறலாம்.