தமிழகத்தில் அரசாங்க பணியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.
தேர்வு முறையில் இந்த ஆண்டு முதல் புதிய விதிகளை டி.என்.பி.எஸ்.சி. கொண்டு வந்துள்ளது.
வழக்கமாக, வினாக்களுக்கு பதில் அளிக்க நான்கு விடைகள் (A, B, C D) அளிக்கப்படும்.
இனிமேல் ‘E’ என்ற மற்றொரு ஆப்ஷனும் கொடுக்கப்படும்.
“இந்த கேள்விக்கு எனக்கு விடை தெரியாது” என்பதே அந்த ஆப்ஷன்.
தேர்வர்கள் கறுப்பு மையுடன் கூடிய பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
வேறு வண்ணத்தையோ, வேறு பேனாவையோ பயன்படுத்தக்கூடாது. விடைத்தாளின் கடைசி பக்கத்தில், காலியாக ஒரு பேப்பர் இருக்கும். அந்த காலி பக்கத்தில், எத்தனை கேள்விகளுக்கு விடை அளித்துள்ளீர்கள் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இதனை குறிப்பிடாவிட்டால், தேர்வர்கள் வாங்கியுள்ள மொத்த மதிப்பெண்களில் இருந்து 5 மதிபெண் குறைக்கப்படும்.
– பா. பாரதி