1921 ம் ஆண்டு ஜூன் மாதம் 10 ம் தேதி இளவரசர் ஆன்ட்ரூ-வுக்கும் இளவரசி அலைஸ்-க்கும் மகனாக பிறந்த இளவரசர் பிலிப், ஆன்ட்ரூ – அலைஸ் தம்பதியின் ஐந்தாவது குழந்தையாவார்.

இவருடன் பிறந்த மற்ற நால்வரும் பெண்கள் அதோடு, இளவரசர் பிலிப்பை-விட வயதில் மிகவும் மூத்தவர்கள்.

இளவரசர் ஆன்ட்ரூ

இவரது தந்தை இளவரசர் ஆன்ட்ரூ டென்மார்க் இளவரசராக பிறந்தவர், 1863ம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆன்ட்ரூ-வின் தந்தை முதலாம் ஜார்ஜ் கிரேக்க மற்றும் டென்மார்க் இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

கிரேக்க நாட்டில் நடந்த கலவரத்தில் முதலாம் ஜார்ஜ் கொல்லப்பட்டதை தொடர்ந்து இளவரசராக பதவி ஏற்றுக்கொண்ட ஆன்ட்ரூ மீது அவரது சகோதரர் முதலாம் கான்ஸ்டான்டின் மேற்கொண்ட போர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது குழந்தைகளுடன் பிரான்ஸ் வழியாக டென்மார்க் தப்பிவந்தார்.

ஒன்றரை வயது இளவரசர் பிலிப்

அப்போது இளவரசர் பிலிப்-க்கு ஒன்றரை வயது.

இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் மகள்வழி சொந்தமான இளவரசர் பிலிப்பின் தாயார் இளவரசி அலைஸ், ஜெர்மன் இளவரசரான லூயிஸ்-சின் மகள் ஆவார். இளவரசர் லூயிஸ் பின்னாளில் மவுண்ட்பேட்டன் என்று தனது பட்டத்தை மாற்றிக்கொண்டார். லார்ட் மவுண்ட்பேட்டன் இளவரசி அலைஸ் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

தனது தாயார் இளவரசி அலைஸ் உடன் இளவரசர் பிலிப்

இளவரசி அலைஸ், பின்னாளில் கன்னியாஸ்திரியாக மாறி, கிரேக்க நாட்டில் உள்ள கிருத்துவ சபைகள் மூலம் நற்பணிகள் செய்துவந்தார்.

இப்படி கிரேக்கம், டென்மார்க், ஜெர்மனி என்று பலநாடுகளுடன் தொடர்பு கொண்ட இளவரசர் பிலிப் 1947 ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ், தனது மகள்களான இளவரசி எலிஸபெத் மற்றும் மார்கரேட்டுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இளவரசர் பிலிப்புக்கும் இளவரசி எலிஸபெத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இளவரசர் பிலிப் இளவயதில்

இளவரசி எலிஸபெத்தை கரம் பிடிப்பதற்காக மன்னர் ஜார்ஜ்-ஜின் கோரிக்கையை ஏற்று தனது கிரேக்க மற்றும் டென்மார்க் இளவரசர் பட்டத்தை துறந்தார். அவரது திருமண நாளான 20 நவம்பர் 1947 ல் அவருக்கு எடின்பர்க் கோமகன் என்று பட்டம் சூட்டப்பட்டது.

ராணி எலிசபெத் – இளவரசர் பிலிப்

தனது குடியுரிமை குறித்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் எழுந்த போதும், தனது காதல் மனைவி ராணி எலிஸபெத்-துக்காக தான் இறக்கும் வரை உண்மையான ஒரு பிரிட்டிஷ் பிரஜையாகவே வாழ்ந்து மறைந்தார் இளவரசர் பிலிப்.

இதுகுறித்து 1972 ம் ஆண்டு தனது 25 வது திருமண நாளின் போது பேசிய இளவரசர் பிலிப் தனது பாட்டனாரை கொன்று தனது தந்தை மேல் பழி சுமத்திய கிரேக்க நாட்டின் மீது தனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை என்று இருக்கிறார்.