இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது,
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, ஓவர் ஸ்பீட், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு விதிமீறல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த சாம்பிளுக்கு ஒன்றிரண்டு என்றில்லாமல் அனைத்து சிக்கனல்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், சாலைகளில் ‘ஸ்பீட் கன்’ பொருத்தப்பட்டு வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே குழுவாக நின்று பலரையும் மடக்கி அபராதம் விதிப்பதை அடுத்து சென்னை போன்ற நகரங்களில் வாகன உரிமம் இல்லாமல் ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது போன்ற விதிமீறல்கள் குறைந்து வருவது காவல்துறையினர் அவ்வப்போது வெளியிடும் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.
இருப்பினும், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த அபராத தொகையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு அதனை 2025 மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதில் எந்தெந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
1. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு ரூ. 10000 அபராதம் அல்லது / மற்றும் 6 மாத சிறை (இதற்கு முன் ரூ. 1000ல் இருந்து 1500 வரை)
2. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மீண்டும் சிக்கினால் ரூ. 15000 அபராதம் அல்லது / மற்றும் 2 ஆண்டு சிறை (இதற்கு முன் ரூ. 1000ல் இருந்து 1500 வரை)
3. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 1000 அபராதம் மற்றும் மூன்று மாதம் உரிமம் பறிப்பு (இதற்கு முன் ரூ. 100)
4. சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டினால் ரூ. 1000 அபராதம் (இதற்கு முன் ரூ. 100)
5. வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ரூ. 5000 அபராதம் (இதற்கு முன் ரூ. 500)
6. சிக்னலை மீறுபவர்களுக்கு ரூ. 5000 அபராதம் (இதற்கு முன் ரூ. 500)