சீனாவின் வுகான் மாநிலத்தில் தொடங்கி உலகம் முழுவரும் பரவி, மக்களை துன்பப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், எத்தனை பேர் மரணத்தை தழுவி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட 27 நாடுகளில் உள்ளதாகவும், இதன் காரணமாக 259 பேர் மரணத்தை தழுவி இருப்பதாகவும் 11,946 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிப்பதாக ஏசியா நியூஸ் சேனல் பட்டியல் வெளியிட்ட உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனோ வைரஸ் உலக நாடுகளையும், மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை எந்தவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக அண்டை நாடுகளுக்கும் பரவி வருகிறது.
இந்த நோய் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் உள்பட பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் மேலும் பீதியை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி (பிப்ரவரி 1ந்தேதி 2020) , கொரோனா வைரஸ் தாக்குதல் எத்தனை நாடுகளில் உள்ளது, இதன் காரணமாக இறந்தவர்கள் எத்தனை பேர், பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 259 பேர் பலியாகி உள்ளதாகவும், 11,791 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஒரே ஒருவர் மட்டுமே (கேரளா) கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்ற பட்டியல்