சென்னை: வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தேர்தல்ஆணையத்தின் பதிலால் எரிச்சல் அடைந்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாஜக சார்பில், வாக்காளர்களின் மொபைல் எண்களுக்கும், வாட்ஸ்அப் எண்களக்கும்  தேர்தல் வாக்குறுதிகள், பிரசாரம் தொடர்பான அறிவிப்புகளை மாநில பாஜகவினர் அனுப்பி வருகின்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்,  வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர்  பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி?”, இது தொடர்பாகசைபர் கிரைமில் புகார் கொடுத்து, அதை கண்டுபிடிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியதுடன், மற்ற எல்லா விஷயங்களிலும் தேர்தல் ஆணையம்  முதன்மையை உறுதிப்படுத்தும்போது,  இதை கவனிக்க முடியாதா?  .”ஆளுங்கட்சி என்றால் அதேர்தல் ஆணையம்மைதி காக்குமா ? என கேள்வி எழுப்பியதுடன், இது தொர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.