டில்லி

னவரி முதல் மே வரை ஐந்து மாதங்களில் வீடுகளின் விற்பனை 40%க்கு மேல் சரிந்துள்ளது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ப்ராப் ஈக்விடி நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனை பற்றி ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தியது.  இந்த கணக்கெடுப்பு 42 நகரங்களில் இந்த வருடம் ஜனவரி முதல் மே வரை நடந்த ஐந்து மாதங்களில் விற்கப்பட்ட வீடுகளைப் பற்றி கணக்கெடுத்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் மொத்தம் 1.10 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  கடந்த வருடம் இதே நேரத்தில் 1.87 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியிருந்தன.  அதாவது வீடுகளின் விற்பனை சுமார் 41% குறைந்துள்ளது.

பணமதிப்பு குறைவு நடவடிக்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த வீடுகளின் விற்பனை, பிறகு வட்டி குறைப்பு, மற்றும் அரசின் முதல் வீடு வாங்குவோருக்கு மானியம் போன்ற திட்டங்களினால் சிறிது உயர்ந்தது.   ஆயினும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை.

ரியல் எஸ்டேட் ரெகுலேஷன் விதிகள் அமுலாக்கத்தால்,  ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானங்கள் விரைவில் முடிவு பெற்றாலும்,  புது கட்டுமானங்கள் ஆரம்பிப்பது தாமதம் ஆகும்.  அத்துடன் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி யின் தாக்கம் வீடுகளின் விலையில் எப்படி இருக்கும் என திட்டவட்டமாக தெரியவில்லை.  இதனால் ஜிஎஸ்டி பற்றி தெளிவாக தெரியும் வரை வீடுகளின் விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது