குஜராத் சார்பில் ராஜ்யசபா தேர்தலில் பாரதியஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானி போட்டியிடுகின்றனர்.
இதைத்யடுத்து, குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை, பாரதிய ஜனதாவுக்கு இழுக்கும் வேளையில் அக்கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. காங்கிரஸ் எம்ல்ஏக்களை விலைகொடுத்தும் வாங்க பாரதியஜனதா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குஜராத்தில் குதிரை பேரம் நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.
இதன் எதிரொலியாக காங்கிரசை சேர்ந்த மேலும் இரண்டு, எம்எல்ஏ.,க்கள் திடீரென பதவி விலகி உள்ளனர். இதனால் காங்., பலம் குறைந்து வருகிறது.
குஜராத்தில், காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆக.8-ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. காங்., சார்பில் , அகமது படேல் என மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.
ராஜ்யசபா தேர்தலில் காங்., வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் தேவை. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மற்ற எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதாவுக்கு தாவாமல் இருக்க பெங்களூரு அழைத்து வரப்பட்டு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.