நியூஸ்பாண்ட்
 

அதிரடியில்...  நிலோபர் கபீல்
அதிரடியில்… நிலோபர் கபீல்

“அதிரடி பிரமுகர் ஒருவர் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.. பார்த்தீரா..” என்றபடியே வந்தார் நியூஸ்பாண்ட்.
“ஆமாம்…  ஜெயலலிதா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது போது வாணியம்பாடியில் அடியாட்களை கூட்டிக்கொண்டு பஸ்சை அடித்து நொறுக்கி கடைகளை உடைத்து எரிந்தவர்களில் முக்கியமானவர் நிலோபர் கபீல் !    இந்த நிலோபர் கபீலுக்குத்தான் அ.தி.மு.க. சார்பில் வாணியம்பாடியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார்.
நிலோபரும் வெற்றி பெற்றார்.    இப்போது அந்த நிலோபருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியும் அளித்திருக்கிறார் ஜெயலலிதா” என்றோம்.
“அதே போல இன்னொரு மாண்புமிகு பற்றிச் சொல்கிறேன்..  சினிமாக்காரர்கள் படப்பிடிப்புக்காக விரும்பும் மேற்குமாவட்ட ஊர் அது. பெயரிலேயே சாதி அடையாளம் கொண்ட ஊர். அங்கு சில வருடங்களுக்கு முன்பு சாராயம் காய்ச்சி விற்ற நபர். பலமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்.
ஒரு முறை  “இனி சாராயம் காய்ச்சமாட்டேன் என்ற வாசகங்களை கொண்ட அட்டையை கழுத்தில் மாட்டி” தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டார். அப்படி இழுத்துச் சென்றவர் நேர்மைக்கு பெயர் போன “மீசை” காவல் அதிகாரி!”
“சரி, இப்போது அதற்கு என்ன..?“
”அதற்கு என்னவா… அந்த சாராய வியாபாரியும் இப்போது “மாண்புமிகுவாக” ஆகியிருக்கிறார்.. “
“அடக்கொடுமையே… அவர் யாரோ..”
“சொன்னால் தப்பாகிவிடும்.. அப்புறம்  கருப்பண்ண சாமி என் கண்ணைக் கொத்திவிடும்..” – பயந்தது போல் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் நியூஸ்பாண்ட்.