தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்!

திருவனந்தபுரம்,

ந்தியாவின் தங்கமங்கையான முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது.

துறைகளில் சாதனை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக கான்பூர் ஐஐடி கவுரவ டாக்டர் பட்டங்களை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை புரிந்த  பி.டி. உஷாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி  முடிவுசெய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பி.டி. உஷா, சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் இந்தியாவின் தங்கமங்கை என்றும், கேரளாவின்  ‘பய்யொலி எக்ஸ்பிரஸ்’  என்றும், இந்தியாவின் தடகள அரசி என்றும் அழைக்கப்பட்டவர்.

பி. டி. உஷா என அழைக்கப்படும் அவரது முழு பெயர்  பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா.  தற்போது இவர்  இளம் தடகள வீரர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கேரளத்தின் கொயிலாண்டி என்ற பகுதியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.

இந்த ஆண்டு ஐஐடி கான்பூரின் 50-வது பட்டமளிப்பு விழா வரும் 15,16 தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பி.டி. உஷாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.

பி.டி.உஷாவுக்கு  வழங்கப்படும் இரண்டாவது டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.உஷா பெற்றுள்ள முக்கிய விருதுகள்

1984 – மத்திய அரசிடம் இருந்து “அர்ஜுனா விருது”
1984 – இந்திய அரசிடம் இருந்து “பத்மஸ்ரீ விருது”
1985 – ஜகார்த்தா ஆசிய தடகள மீட் மூலம் ‘சிறந்த பெண் தடகள விராங்கனைக்கான விருது’.
1984,1985,1986,1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசியா விருது’.
1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை’ வழங்கப்பட்டது.
1986 – சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் ‘சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது’.
1999 – ‘கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது’.


English Summary
Honorable Doctorate for Athlete P.T.Usha, Kanpur IIT Decided