டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. மாநிலத்தில் உள்ள ஆயுத குழுக்கள் சுயாட்சி, தனிநாடு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றன.
அவற்றில் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அமைப்புடன் 2015ல் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் அதன் பிறகும் ஆயுத படை சிறப்பு சட்டம் நீக்கப்படவில்லை.
நாகாலாந்து பிரச்னைக்கு இறுதி தீர்வு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றமான பகுதியாக அறிவித்து இருக்கிறது. மிகவும் குழப்பமான, ஆபத்தான நிலையில் மாநிலம் என்றும் தெரிவித்து உள்ளது.