அகமதாபாத்:
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதுகில் இருந்த கொழுப்புக்கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அகமதாபாத் நகரைச் சேர்ந்த பிரபல மருத்துவமனை அறிவித்து உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கழுத்தின் கீழே பகுதியில் கொழுப்புக் கட்டி (lipoma) இருந்து வந்தது. இதனால் சரியான முறையில் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள கேடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தஅ அமித்ஷாவுக்கு மருத்துவர்கள் கொழுப்பு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இதுகுறித்து கேடி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமித்ஷாவுக்கு மயக்க மருந்து சிகிச்சை அளித்து, அவரது கழுத்தின் பின்பகுதியில் இருந்த கொழுப்புக்கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று தெரிவித்து உள்ளது.