பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பழமையான மதராசாவில் மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உலகப்புகழ்பெற்ற தசரா பெருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள பழமையான மதரஸா ஒன்றில் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த இந்துத்வா கும்பல், அங்கு பூஜை செய்து செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மர்ம நபர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.