டில்லி:

வன்முறை காரணமாக மியான்மரை சேர்ந்த 500 இந்துக்கள் ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் சேர்ந்து பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதியில் தஞ்சமடைந்துள்ள இவர்கள் மியாமரின் வடகிழக்கில் உள்ள குதுப்பலாங் பகுதியை சேர்ந்த இவர்கள் மலைகளின் வழியாக நடந்து தஞ்சமடைந்துளனர்.

மியான்மரில் இருந்து கடந்த 10 தினங்களில் 90 ஆயிரம் பேர் பங்களாதேஷ் வந்திருப்பதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உணவு, மருந்துகள் இன்றி அவதிப்பட்டு வருவதாக தெரிவி க்கப்பட்டுள்ளது. மியான்மரின் ராகினே மாநிலத்தை சேர்ந்த 414 இந்துக்கள் குடும்பத்தினர் வந்துள்ளனர் என செய்திகள் வெளியானது.

பங்களாதேஷை சேர்ந்த இந்து, புத்த மதம், கிறிஸ்தவர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரானா தாஸ்குப்தா அந்த கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ இந்து மதத்தை சேர்ந்த 510 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகம்.

மியான்மரின் மாங்குடு மாவட்டத்தை சேர்ந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடந்த மாதம் 27,28ம் தேதிகளில் இவர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 86 பேர் கொல்லப்பட் டுள்ளனர். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கடந்த 5 தினங்களில் பங்களாதேஷ் கடற்கரையில் 54 ரோஹிங்கியா முஸ்லிம்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இது வரை மியான்மரில் ஏற்பட்ட கலவரத்தில் 400 பேர் இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மியான்மரில் ராஹினே பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும்.

இங்கு லட்சகணக்கான ரோஹிங்கியா பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்கள் குடிமக்களாகவே அங்கிகரிக்கப்படவில்லை. பவுத்த மதத்தினர் ஆதிக்கம் மிகுந்த அந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மியான்மரில் 0.5 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். முஸ்லிம்கள் 4.3 சதவீதம் பேர் உள்ளனர்.