லண்டன்:

இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதாரர்கள் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.


2019-ம் ஆண்டுக்கான சண்டே டைம்ஸ் இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் விவரம்:

முதலிடத்தில் இருந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜிம் ரேட்கிளிஃபை பின்னுக்குத் தள்ளிவிட்டு, 22 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்துஜா சகோதரர்கள் இங்கிலாந்தின் முதல் பணக்காரர்களாகியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த டேவிட் மற்றும் சிமன் ரியூபென் ஆகியோர் 18.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்துஜா சகோதரர்கள் வங்கி, எண்ணை மற்றும் வாயு, தகவல் தொழில்நுடப்டம் மற்றும் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஸ்ரீசந்த், கோபிசந்த் சகோதரர்கள் இவற்றை நிர்வகிக்கின்றனர்.

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பணக்காரர்கள் பட்டியலில் 69-வது இடத்தில் உள்ளனர்.

லஷ்மி மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் 20-வது இடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தில் 151 பில்லியனர்களும், அமெரிக்காவில் 463 பில்லியனர்களும்,சீனாவில் 294 பில்லியனர்களும், இந்தியாவில் 76 பில்லியனர்களும் உள்ளனர்.

பெரு நகரங்களைப் பொறுத்தவரை, லண்டனில் 95 பில்லியனர்களும், மும்பையில் 33 பில்லியனர்களும், டெல்லியில் 15 பில்லியனர்களும் உள்ளனர்.