நியூயார்க்:  ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மத்தியஅரசு ஐ.நா சபைக்கு ரூ.6.16 கோடி நிதி வழங்கி உள்ளது. இது, இந்தி@UN’ திட்டம், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான இந்திய அரசின் தொடர்ச்சி யான முயற்சிகளின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தியா தொடங்கப்பட்ட ‘இந்தி@UN’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்தி பேசும் மக்களிடம் தகவல்களைப் உலகம் முழுவதும் பரப்புவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தியா  தற்போது 6.16 கோடி  நன்கொடை அளித்துள்ளது.  இதற்கான காசோலையை ஐநா.வின் உலகளாவிய தகவல் தொடர்பு துறையின், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு துணை இயக்குநரும் பொறுப்பு அதிகாரியுமான மிட்டா கோசலிடம்  இந்திய நிரந்தர தூதரகத்தின் தூதர்/ துணைப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரர் வழங்கினார்.

இந்தி மொழியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது வெளிப்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன், உலகம் முழுவதும் உள்ள ‘ மில்லியன் கணக்கான  இந்தி பேசும் மக்களிடையே உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அதிக விழிப்புணர்வை பரப்புதல் தொடர்பாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.