சிம்லா,

மாச்சலப் பிரதேசம் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் அறிவித்து உள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரபத்ர சிங் தலைமை யிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப்பேரவைக்கு விரைவில்  தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இன்று  சிம்லா அருகேயுள்ள மாண்டி பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் பங்கேற்று பேசினார்.

அப்போது, தற்போதைய முதல்வர் வீரபத்ர சிங்தான் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக நீடிப்பார் என்று கூறினார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது,  70 ஆயிரம் வாலிபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது என்று கூறினார்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதா ஆளும்  குஜராத் மாநிலத்தில் வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதை  ராகுல் சுட்டிக் காட்டினார்.

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 1500 புதிய பள்ளிகள், 55 புதிய கல்லூரிகள்,  பல சுகாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்குள்ள விதவை பெண்களுக்கு காங்கிரஸ் அரசு 750 ரூபாய் உதவிப்பணம் வழங்கி வருகிறது, இந்திரா ஆவாஸ் யோஜானா திட்டத்தின்கீழ் இங்குள்ள பயனாளிகளுக்கு 1.30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆனால்,  குஜராத்தில் அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டிய ராகுல், குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகால பா.ஜ. ஆட்சியில்  வெறும்10 கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன என்றும், விதவை பென்சன்  400 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து நல்ல திட்டங்கள் நிறைவேற்றிட தற்போது திறமையாக ஆட்சி செய்து வரும்  வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், இங்கு பாரதியஜனதாவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.