சிம்லா:

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ராணுவ அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூனியர் ராணுவ அதிகாரியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 56 வயதான அந்த அதிகாரியை இமாச்சல் போலீசார் கைது செய்துள்ளார். சிம்லா ராணுவ பயிற்சி கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்ட அந்த ஜூனியர் அதிகாரியின் மகளை தான் இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்ச £ட்டப்பட்டுள்ளது.

21 வயதாகும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த அதிகாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பாலியல் பலாத்காரத்தில் அந்த பெண் புகார் அளித்ததையும், இதை தொடர்ந்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டதையும் மாவட்ட எஸ்பி சவுமியா சாம்பசிவம் உறுதிப டுத்தினார். ஆனால், அவரது விபரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

புகார் அளித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதன மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணை ராணுவ அதிகாரி தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அதிகாரியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.