நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராகவும், முன்னாள் அதிபர் வேட்பாளராகவும் இருந்தவர் ஹிலாரி கிளிண்டன். மேலும், நியூயார்க் செனட்டராக நீண்டகாலம் இருந்தவர்.
இவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்க வாக்காளர்கள் தெளிவாக முடிவெடுத்து, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நமக்கான அடுத்த அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.
இதுவொரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு! டிரம்ப் புறக்கணிக்கப்பட்டதானது, அமெரிக்காவிற்கு வரலாற்றில் புதிய பக்கங்களை திறந்துள்ளது.
இந்த நிகழ்வை சாதித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். வரும் நாட்களில் ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம்!” என்றுள்ளார் அவர்.