அலாஸ்கா:  உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக அலாஸ்காவில், உலகின் பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களான  அமெரிக்க  அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து,  ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து வந்த  அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் உள்ள எல்மெண்டோர்ப் ரிச்சர்ட்சன் ராணுவ தளத்தில்   ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை சமூக மாக நடைபெற்ற தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று புதின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த பேச்சுவார்ர்தையான  அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி யுஎஸ் அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதையடுத்து இருவரும் பேச்சுவார்ர்தையை தொடங்கினர்.  சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.  பின்னர், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்கு வதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.

அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் மற்றும் புதின்   உயர்மட்ட உச்சிமாநாட்டில் உக்ரைனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, உடன்பாட்டின் பகுதிகளை சுட்டிக்காட்டி, நட்பை மீண்டும் வளர்த்தனர், ஆனால் போர்நிறுத்தம் குறித்த எந்த செய்தியையும் வழங்கவில்லை. உதவியாளர்களுடனான மூன்று மணி நேர பேச்சுவார்த்தை திடீரென முடிவடைந்த பிறகு,

தன்னை ஒரு சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்குபவர் என்று அழைத்துக் கொள்வதில் விருப்பமுள்ள டிரம்ப், “நாங்கள் இன்னும் அங்கு (ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு) வரவில்லை, ஆனால் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த ஒப்பந்தமும் இல்லை” என்று கூறினார்.

அவர் சந்திப்பை “மிகவும் பயனுள்ளதாக” அழைத்தார், “பல புள்ளிகள்” ஒப்புக் கொண்டன, இருப்பினும் அவர் குறிப்பிட்டவற்றை வழங்கவில்லை.

“மிகவும் சில மட்டுமே உள்ளன, சில அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல, ஒன்று மிக முக்கியமானது” என்று டிரம்ப் விரிவாகக் கூறாமல் கூறினார்.

அமெரிக்கத் தலைவர் புதினை அணுகுவது குறித்து கவலை தெரிவித்த நேட்டோ தலைவர்களுடன் இப்போது ஜெலென்ஸ்கியையும் கலந்தாலோசிப்பதாக அவர் கூறினார்.

 12 நிமிடங்கள் மட்டுமே நீடித்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பொதுவான ஒத்துழைப்பு அடிப்படையில் பேசினார். “எந்த தடைகளையும் உருவாக்க வேண்டாம்” என்றும், “இந்த வளர்ந்து வரும் முன்னேற்றத்தை ஆத்திரமூட்டல் அல்லது திரைக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகள் மூலம் சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம்” என்றும் புடின் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார்.

“நாங்கள் அடைந்துள்ள புரிதல்… உக்ரைனில் அமைதிக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று புடின் கூறினார். டிரம்ப் இரண்டாவது சந்திப்பைப் பற்றி யோசித்தபோது, புடின் சிரித்துக் கொண்டே  “அடுத்த முறை மாஸ்கோவில்.”  என்றார்.

அலாஸ்காவில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்போவதில்லை என்றும் உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.