அகமதாபாத்,

நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம் பேர் என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் தொகாடியா கூறி உள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு காரணமாக இருந்ததாக பிரவின் தொகாடியாமீது புகார் கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார் பிரவீன் தொகாடியா. அதையடுத்து அவர்மீதான பிடியாணை ரத்து செய்யப்பட்டது.

 

கடந்த 1996ம் ஆண்டு குஜராத்தில்  நடைபெற்ற மதக்கலவரத்தை தொடர்ந்து தொகாடியா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி தொகாடியாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவர்மீது ஜாமினில் வெளிவரமுடியாத பினை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய தொகாடியா,  இந்த வழக்கில் எனக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்ட சம்மனுக்கு நான் பதில் அளிக்கவில்லை என்றும், அதன் காரணமாக தனக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான் ஆஜராகி உள்ளதால் வாரண்ட்டை ரத்து செய்துள்ளது.

“போலீஸார் என்னிடம் சம்மனை அளிக்கவில்லை என்று கூறிய தொகாடியா, என்மீது வாரண்ட் பிறப்பிப்பதற்கு, மாநில உள்துறை மந்திரி அல்லது முதலமைச்சரின் தலையீடு இல்லை என்றும், இதுகுகு  வேறு  ஒருவர் காரணம் என்றும், அதுகுறித்து  தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

1996 ம் ஆண்டு கொலை வழக்கில், தன்னை  குற்றவாளி என நீதிமன்றம் நிரூபிக்கவில்லை என்று உறுதி அளித்ததற்காக, பிஜேபி மீது குற்றம்சாட்டப்பட்டு பலர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பிரவீன் தொகாடியா. குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுபோல பட்டிதார் போராட்டத்தின்போதும் நடைபெற்றது என்றும், அப்போது முதல்வராக இருந்த ஆந்திபென், போராட்டக்காரர்கள் மீது லத்தி சார்ஜ் செய்ய உத்தரவிடாத நிலையில், போலீசார் லத்தி சார்ஜ் நடத்தினார். இதற்கும் வேறு ஒருவர்தான் காரணம் என்றார்.

மேலும்,  தற்போதைய துணைமுதல்வர் நிதின் பட்டேல், முதல் விஜய் ரூபானி போன்றோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்ற தொகாடியா, இதன் பின்னணில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பிறகு தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும்  இந்த வழக்கில் தொகாடியா, பாபுபாய் ஜமனாதாஸ் பட்டேல், கிருஷ்ணாவதன் பிரம்பத் உள்பட 39 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.