சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4)  பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார்.

தமிழ்நாட்டில் மாநில திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், கல்லூரி பட்ட மளிப்பு விழாக்களை மாநில அமைச்சர் புறக்கணித்து வருகிறார். இது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்  46வது பட்டமளிப்பு விழா இன்று  பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவை உயர்கல்வித்துறை  அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார்.

பட்டமளிப்பு விழாவின்   துவக்கமாக முதலில் “தேசிய கீதம்” பாடப்பட்டு அதன் பின்னர் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்பட்டது. இது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த பட்டமளிப்பு விழாவில், 753 ஆராய்ச்சி மாணவர்கள், 66 இளநிலை மாணவர்கள் விழாவில் நேரடியாக ஆளுநரிடம் இருந்து பட்டங்களை பெற்றனர்.

[youtube-feed feed=1]