சென்னை: ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதால், ஆளுநருடன் நட்புறவுடன் செயல்பட முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும், பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு மாற்றம் நடைபெற்றது. அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநருடன் ஆர்.என்.ரவியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால், உயர்கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால், அமைச்சரவை மாற்றத்தின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சென்னையில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறியதுடன், மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பத் நிரூபிக்க வேண்டும் என்றவர், இதனால், பல்கலைக்கழக காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் கல்லுரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், அதுபோல பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விரைவில் உரிய தீர்வு காணப்படும்” .
. துணைவேந்தர் நியமனத்தை பொருத்தவரை, அரசு மற்றும் வேந்தராகிய ஆளுநரின் நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளன. துணைவேந்தர் தேர்வு குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்துகிறார். இதுகுறித்து முதல்வர் மற்றும் அனுபவமிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி, துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முரண்பாடுகள் களையப்படும். பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.