புதுடெல்லி: ஒரு தம்பதியரின் விவாகரத்திற்கான, காத்திருப்பு காலமான 18 மாதங்களில், 6 மாதங்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்து திருமணச் சட்டம் 1955ல், பிரிவு 13B -யின்படி, பரஸ்பர மனமொத்த விவாகரத்தில் காத்திருப்பு காலமாக 18 மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் முதலே பிரிந்து வாழும் தம்பதிகளின் சட்டப்படி காத்திருப்பு காலமான 18 மாதங்களில், 6 மாத காலஅளவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

மீண்டும் அந்த தம்பதிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லாத சூழலில், குறைந்த நாட்களே இந்தியாவில் தங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள அப்பெண் விருப்பம் தெரிவித்து, குடும்ப நீதிமன்றத்தில், 6 மாதங்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவரின் கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

அந்த தம்பதிகள் பிரிந்திருக்கும் காலம், அவர்களின் மனம் ஒவ்வாத நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.