இந்திய ரயில்வேயின் பொறியியல் அதிசயமான பாம்பன் புதிய ரயில் பாலம் மீது அதிவேக ரயில் சோதனை இன்று நடத்தப்பட்டது.
மண்டபம் – ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலம் பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரமானது.
கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் 17 மீ உயரத்திற்கு செல்லும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அதிவேக ரயில் சோதனையை அடுத்து மண்டபம் – ராமேஸ்வரம் இடையே வழக்கமான ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.