தஞ்சாவூர்:  தஞ்சை அருகே சாலையோரம் இருந்த உயர்அழுத்த மின்சார கம்பியில் தனியார் பேருந்து உரசியதில், அதில் பயணம் செய்த 5 பேர் மின்சாரம் பாய்ந்து பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே திருக்காட்டுப்பள்ளி வரகூர் கிராமத்தில்  சாலையோரம் நின்றுகொண்டிருந்த உயர்அழுத்த மின் கம்பியில் மோதியதால்,  அந்த தனியார் பேருந்தில்,  மின்சாரம் பாய்ந்தது. இதில், அதில் பயணம் செய்த பயணிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அப்போது, தனியார் பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள், கூட்டமாக குவிந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பயணிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]