சென்னை: ​சென்னை கொடுங்​கையூர் பகு​தி​யில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்​ள​தாக கூறி,  7 நாட்​களில் அதை இடிக்க வேண்டு மென  பிறப்பித்த சென்னை மாநக​ராட்சி  உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாகராட்சி முறையாக ஆய்வு செய்யாமல்  சிலரின் வற்புறுத்திலின் பேரில் ஒருதலைப் பட்சமாக கோவிலை இடிக்க பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொடுங்கையூர் பகுதியில் சாலையோரம் உள்ள கோவிலை  சாலை ஆக்கிரமிப்பு என கூறி  சென்னை மாநகராட்சி இடிக்க  நோட்டீஸ் அனுப்பியது இதை எதிர்த்து கோயில் நிர்​வாகம் தரப்​பில் ஜெயா என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், சென்னை மாநகராட்சி தரப்பில், தங்களிடம்  முறையான  விளக்​கம் அளிக்க எந்​தவொரு கால அவகாச​மும் அளிக்​காமல், கோயில் ஆக்​கிரமிப்​பில் உள்​ளதா என்​பதை கண்​காணிப்பு குழு​வினர் ஆய்வு நடத்​தாமல், நேரடி​யாக கோயிலை இடிக்க வேண்​டுமென அதி​காரி​கள் உத்​தர​விட்டு இருப்​பது சட்​ட​விரோத​மானது என தெரி​வித்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன்  அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, நீதிப​தி​கள், மாவட்ட ஆட்​சி​யர்,வரு​வாய் ஆணை​யரின் பரிந்​துரைப்​படி சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற ஏற்​கனவே உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்​தும் வகை​யில், சம்​பந்​தப்​பட்ட கோயில் சாலையை ஆக்​கிரமித்து உள்​ள​தாக குறிப்​பிட்டு எந்த களஆய்​வும் நடத்​தாமல் நேரடி​யாக கோயிலை 7 நாட்​களுக்​குள் இடிக்க வேண்​டுமென மாநக​ராட்சி நிர்​வாகம் உத்​தர​விட்​டிருப்​பது ஏற்​புடையதல்ல.

சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் பதிலளிக்க, விளக்​கமளிக்க போதிய அவகாசம் வழங்​கும் வகை​யில் விளக்​கம் கோரும் நோட்​டீஸ் பிறப் ​பித்​து, அதன்​பிறகே இறுதி உத்​தர​வைப் பிறப்​பிக்க வேண்​டும். எனவே, சம்​பந்​தப்​பட்ட கோயில் சாலை​யோர ஆக்​கிரமிப்​பில் உள்​ளதா என்​பதை மண்டல அளவி​லான கண்​காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்​டும்.

அதன்​பிறகு, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் தரப்​பில் விளக்​கமளிக்க வாய்ப்​பளித்​து, சட்​டப்​பூர்​வ​மாக நோட்​டீஸ் பிறப்​பித்​து, அதன்​பிறகே கோயிலை இடிப்​பது தொடர்​பாக முடிவு எடுக்க வேண்​டும். எனவே, இதுதொடர்​பாக மாநக​ராட்சி நிர்​வாகம் தரப்​பில் கோயிலை இடிக்க பிறப்​பி்க்​கப்​பட்ட உத்​தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]