மதுரை: கடந்த தமிழக்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நீட் தேர்வு முறைகேடு. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் வெளியானது. இதில் மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவரது மகன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில்,” நீட் முறைகேடு தொடர்பாகபல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, தற்போது, ஜாமீனில் உள்ளேன்.  இந்த வதுஙககஙன  விசாரணையின்போது எனது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்று மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றி,  நீதித்துறை நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

தான்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதால், தனக்கு உண்மைச் சான்றிதழை வழங்க வேண்டும்,   எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற்றொரு மாணவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  மாணவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் சான்றிதழ்களை வழங்குவோம் என தேனி நீதித்துறை நடுவரிடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

மேலும்,மாணவர்கள் பயின்ற கல்லூரிகளில் விண்ணப்பித்து, கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க அனுமதித்தால், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இல்லை யெனில் வழக்கு விசாரணை முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.