சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக அவர் பிரசாத் ஸ்டூடியோ மீது தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அறையில், இளையராஜா கடந்த 40 ஆண்டுகளா இசை பணியை மேற்கொண்டு வருகிறார். அந்த இடத்தை காலி செய்யுமாறு இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் கூறிய நிலையில், இரு தரப்புக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றதுக்கு சென்றது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என இளையராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தன்னுடைய பொருட்களை எடுக்க பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த விவகாரத்தில், இளையராஜா தங்கள் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது என்ற நிபந்தனையை ஒப்புக்கொண்டால், அவரை ஸ்டூடியோவுக்கும் அனுப்பதிப்போம் என்று பிரசாத் ஸ்டியோ தரப்பில் கோரப்பட்டது. இதற்கு இளையராஜா ஒப்புக்கொள்வதாக அறிவித்தார்.
பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதால் ஸ்டூடியோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா இருக்கலாம் என்றும், பிரசாத் ஸ்டூடியோவுடன் ஆலோசித்து இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இளையராஜா முடிவெடுக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.