லிஃபோர்னியா

னிதர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி என்பது மாறி உள்ளதாக ஒரு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

மனிதர்களின் உடல் வெப்பம் சாதாரணமாக 98.6 டிகிரி ஃபாரன் ஹீட் என நாம் படித்துள்ளோம்.  நமக்கு ஏதும் உடல் நிலை சரியில்லை என மருத்துவரிடம் சென்றால் அவர் தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்து இந்த வெப்பத்தை விட அதிகம் இருந்தால் ஜுரம் எனக் கூறுவது வழக்கம்.   இது 19 ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கமாக உள்ளது.

ஆனால் தற்போது கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம் ஒரு புதிய ஆய்வு நடத்தி உள்ளது.  அதன்படி மனித உடலில் சராசரியாக முன்பைவிட  0.29   டிகிரி  ஃபாரன் ஹீட் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது  அத்துடன் மனிதர்களின் உடல் வெப்ப நிலை தினசரி ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு அளவு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்காக இந்த பல்கலைக்கழக குழு 1,90,000 பேரிடம் இருந்து 6,77,000 வெப்ப நிலை பதிவுகளைச் செய்துள்ளது.  அதில் மனித வெப்பநிலை அவரவர் உயரம், எடை, வாழ்க்கை முறை, பழக்கங்களைப் பொறுத்து மாறுதல் உள்ளது தெரிய வந்துள்ளது.  அத்துடன் உடலில் உள்ள நோய்களைப் பொறுத்தும் சராசரி வெப்பநிலை மாறுதல் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் உடல் வெப்பநிலை என்பது பாலினம், வயது உள்ளிட்ட பல இனங்களின் மூலம் மாறி மாறி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  உதாரணமாகச் சாதாரண மனிதனின் உடல் வெப்ப நிலை 97 முதல் 99 டிகிரி  ஃபாரன்ஹீட் வரை இருந்துள்ள்து.  குழந்தைகளுக்கு 97.9 முதல் 100.4 டிகிரி வரை மாறி இருந்துள்ளது.  அத்துடன் உடலுழைப்பு, நேரம், உணவு மற்றும் பானம், பெண்களின் மாத விடாய் ஆகியவற்றின் அடிப்படையில் உடல் வெப்ப நிலை மாறி  இருந்துள்ளது.