சென்னை

மிழக அமைச்சர் சாமிநாதன் இனி கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக் சட்டப் பேரவை கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும்,  வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும் இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.  எனவே மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன.தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று  பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி அடுத்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்

அமைச்சர் வெளியிட்டுள்ள பல்வேறு புதிய அறிவிப்புகள் விவரம் வருமாறு

  • அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்.
  • அடுத்த ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.
  • பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.
  • டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில், தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
  • சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்.
  • ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.
  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும். ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  • வீறுகவியரசர் முடியரசனின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச்சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.
  • சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

என்று அறிவித்துள்ளார்.