திருவனந்தபுரம்: “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது”  முதல்வர் பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு என  கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று கேரள அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கேரள திரையுலகில் நடைபெற்றுள்ள பாலியம் விவகாரம் தொடர்பான  ஹேமா கமிட்டி அறிக்கை மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலமே வெட்கி தலைகுனியும் வகையில் கமிட்டின் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை குறித்து அங்கு தினசரி பஞ்சாயத்துக்கள் தொடர்கின்றன. மேலும் பல திரையுலக ஜாம்பவன்கள் குறித்தும் திடுக்கிடும் தகவ்லகள் வெளியாகி மாநிலத்தில் பேசும்பொருளாக மாறி உள்ளது.

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில்  மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளர் பதவியையும், இயக்குநர் ரஞ்சித் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் ராஜிநாமா செய்தனர். மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்ந்து மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

இந்த நிலையில்,  பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து, இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாக  கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையும், அதனுடன் சேர்த்து ஆதாரங்களை உள்ளடக்கிய பென்டிரைவ் ஒன்றும் அரசிடம் 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்ததா குற்றம் சாட்டி உள்ள வி.டி.சதீஷன்.  இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழு அமைத்து கேரள அரசு விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும்,  ஹேமா கமிட்டி அறிக்கையில்,   பல நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதை  மறைத்து  வெளியிட அரசு முயற்சித்து வருவதாகவும்,  இவ்விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டுமென்றும்   வி.டி.சதீஷன் வலியுறுத்தி உள்ளார்.