டில்லி:

பிரசார பயணத்தின்போது, பழுதான ஹெலிகாப்டரை தரையில் படுத்து பழுது நீக்கிய ராகுல் காந்தியின் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் இமாச்சல பிரதேசம் சென்றார்.  அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் பழுதானது. இதையடுத்து, தனது பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து ஹெலிகாப்டரை சரி செய்துள்ளாா்.

தானும் அவா்களுடன் இணைந்து பழுதை சரி செய்த புகைப்படத்தை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்டுள்ளாா். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், அதனுடன் “சிறிய பழுது தான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரி செய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை” என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தியின் இந்த புகைப்படத்தை இளைஞா்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிா்ந்து வருகின்றனா்.

இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள இமாச்சல பிரதேச 3 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தின்போது இந்த நிகழ்வு நடை பெற்றுள்ளது.

ஹெலிகாப்டர் பழுது நீக்க களத்தில் இறங்கிய ராகுல்…