சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஹெலிகாப்டர் சாகச பயணம் சுற்றுலாவை தொடங்கி வைத்தார்.

பொங்கலை முன்னிட்டு ECR-ல் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தனியார் நிறுவனம் இணைந்து ஹெலிகாப்டர் சுற்றுலா ஏற்பாடு கோவளம் டூ ஓ. எம். ஆர் – ஒருவருக்கு கட்டணம் ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் ஹெலிகாப்டரில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் இன்று முதல் 7 நாட்களுக்கு கோவளத்தில் ஹெலிகாப்படர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ரூ.6000 வீதம் என ஐந்து நிமிடத்தில், கோவளம் கிழக்கு கடற்கரை சாலை துவங்கி, ஓஎம்ஆர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் சென்று திரும்பும் வகையில் இந்த சுற்றுலா பயணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஹெலிகாப்டரில் சென்னையின் அழகை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது மத்திய அரசிடம் அனுமதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]