ஜுங்கா படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் கோகுல் .

அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது இந்தப் படத்துக்கு அன்பிற்கினியாள் எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்ட்ராக பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநரக ஜெய்சங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.