புதிய சாலைப் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர் கடுமையான தண்டனைக்கு, அதிகமான அபராதமும் செலுத்த நேரிடும்.
சாலை பாதுகாப்பு மசோதாவை திருத்தம் செய்ய  மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கொண்ட  குழு ஒன்றை மத்திய அரசு நியமித்து இருந்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைபடி 68 திருத்தங்களையும், 28 புதிய பிரிவுகளையும் அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்த மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அபராதம்:
இதுவரை சிக்னலில் நிற்காமல் சென்றாலோ, காரில் சீட் பெல்ட் அணியாமலோ இருந்தால் ₹ 100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய “சாலை பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அபராதத் தொகை ₹ 1000மாக உயர்த்தப்படுவதுடன், லைசன்ஸ் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட்டால் பெற்றோருக்கு மூன்று  ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .25,000 அபராதமும் விதிக்கப்படும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபர்களுக்கான அபராதம் ₹ 2000ல் இருந்து ₹ 10,000 ஆக உயர்த்தபட்டுள்ளது.

சாலை மரணங்களுக்கான இழப்பீடு 10 லட்சமாகவே உள்ளது . ஹிட் அண்ட் ரன் சந்தர்ப்பங்களில் இழப்பீடு ரூ .25,000 முதல் ரூ .2 லட்சம்வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரவு படி, 2015 ஆம் ஆண்டில் இந்தியச் சாலைவிபத்துகளில் 400 பேர் மரணமடைகின்றனர்.
ஒரு மணி நேரத்தில் 17 பேர் கொல்லப்படுகின்றனர்.

வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால் அபராதம் இனி ₹ 5,000 (முன்னர் ₹ 1000).
“லைசன்ஸ்” இல்லாத நபர்களுக்கு வாகனத்தை கடன் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் அபராதமும்,   மூன்று மாதம் சிறைத்தண்டனையும் கிடைக்கும்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாய், மக்கள் பிரதிநிதிகளும், அரசு ஊழியர்களும் இரண்டு மடங்கு அபராதம் கட்ட வேண்டும்.
இந்த மாற்றங்கள் புதன்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மோட்டார் வாகன (திருத்தச்) சட்டம்-2016 ன் ஒரு பகுதியாகும்.
helmet rule
இந்த  சட்டதிருத்தத்தின் மூலம்  26 வருடங்களாக இருக்கும் மோட்டார் வாகன சட்டம் புதுவடிவம் பெறும்.
இதுகுறித்து பத்திரிக்கையாளரிகளிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ” இந்த மாற்றம், சாலை பாதுகாப்பு விதிகளில் ஒரு மிகப் பெரிய “சீர்திருத்தம்” என்று பாராட்டினர்.