டில்லி:

டில்லியில் கடும் பனிப்பொழிவு  ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சுமார் 250 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுபேலே 17 ரயில்களும் தாமதமாக வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் கடும் குளிர் மற்றம் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், டில்லி, உ.பி., உத்தரகண்ட், ஹிமாசல், மாநிலங்களில் மக்களை பனி வாட்டுகிறது.

டில்லியில் பெய்துவரும் மூடுபனி காரணமாக, சாலைகள் தெளிவின்றி காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் பகலிலேயே இரவு விளக்கை போட்டுக்கொண்டு மெதுவாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுமார் 250 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  டில்லியில் இருந்து செல்லும் விமானங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், பல விமானங் கள் பக்கத்துக்கு மாநிலங்களில் தரையிறங்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, டில்லி வரும் 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக வருவதாகவும், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், ரயில்வே அறிவித்து உள்ளது.

டில்லியில் குளிர் 6.4 டிகிரி செல்சியஷாக பதிவாகி உள்ளதாகவும் சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.