சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னை 27 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்கள் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று சென்னை உள்பட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை முதல் மீண்டும் மழை பெய்து வருவதால், இன்றும் சென்னை உள்பட புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், திருவள்ளூர்., செங்கல்பட்டு, நாகை மற்றும் ராணிப்பேட்டை என பல மாவட்ங்களில் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் . தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.