கோவை:

கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்  3 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 15 பேர் உயரிழந்து இருப்பதாக தகவல் வெறியாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக அனைத்து மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்கள்ள  மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் 3 வீடுகள் மீது அருகிலுள்ள கருங்கல் சுவர், இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

நள்ளிரவின்போது, அந்த வீடுகளில் பலர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது சுவர் இடிந்து விழுந்ததால், அவர்களின்  அதனுள் சிக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த கோர விபத்தில், 4 பெண்கள், சிறுமி என 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3.30 மணியள வில் நடைபெற்றுள்ளது. வீட்டில் 12 பேர் இருந்த நிலையில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.