சென்னை:
டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.