ன்னியாகுமரி

ன்னியாகுமரி உட்பட பல தமிழக மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடும் வெயில் வாட்டி வரும் வேளையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து அங்கெல்லாம் கோடையின் தாக்கம் குறைந்துள்ளது.   பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.   இந்த மழை குறித்து இந்திய வானிலை மையம் எற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஓசூரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது,  ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.  மரங்கள் மற்றும் மின்கம்பங்கள்  முறிந்து விழுந்தன.   மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கின.   சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.   மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.   பழைய வீடுகள் பல இடிந்து விழலாம் என அஞ்சப்படுகிறது.   தென்னை நார் தொழிற்சாலைகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் நார்கள் மிகவும் சேதமடைந்துள்ளன.