சென்னை:
சூரில் தலைமைக்காவலர் முனுசாமியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட கொள்ளையர்கள் அமர் மற்றும் விக்கி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.

பலியான முனுசாமி
பலியான முனுசாமி

கடந்த 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ம் தேதி ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளைக் கும்பலை, குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால் ஆகியோர் பிடிக்கச் சென்றனர். அப்போது, போலீஸாரை கொள்ளையர்கள் கத்தியால் தாக்கினர். இதில் தலைமைக் காவலர் முனுசாமி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏற்கெனவே காவல்துறையில் பிடிபட்டு நெஞ்சுவலியால் பலியான கொள்ளையன் மூர்த்தி
ஏற்கெனவே காவல்துறையில் பிடிபட்டு நெஞ்சுவலியால் பலியான கொள்ளையன் மூர்த்தி

கொள்ளையர்களில் மூர்த்தி மட்டும் காவலர்துறையினரிடம் சிக்கினான். பிறகு நெஞ்சுவலியில் அவன் இறந்துவிட்டதாக காவல்துறை அறிவித்தது.
தப்பி ஓடிய கொள்ளையர்கள் விக்கி, அமரா, சாஹீத் ஆகியோரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில், இன்று சென்னை சைதாப்பேட்டையில் பதுங்கியிருந்த அமரும், பெங்களூரில் பதுங்கி இருந்த விக்கியும் சிக்கினர்.
இன்னொரு கொள்ளையனான சாஹீத்தை வலைவீசி தேடி வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.