பெங்களூரு:
கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இந்த கோலாகல நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலமுதல்வர்கள் கலந்துகொண்டனர்.